கைத்தொழில் புரட்சி

 [07/06, 01:37] Muneera:


 1.கைத்தொழில் புரட்சி     4.0 ‌   

    மனிதன் கைகளினால் பொருட்களினை உற்பத்தி செய்வதற்கு பதிலாக இயந்திரங்களைக் கொண்டு வேகமாகவும் தரமாகவும் உற்பத்தி செய்தமை கைத்தொழில் புரட்சி எனப்படுகின்றது. அதாவது தொழில் புரட்சி என்பது விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியில் இருந்து இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறைக்கு மாறியதை குறிக்கும் .தொழில் புரட்சிகளில் முதல் தொழில் புரட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விவசாய உற்பத்தி முறையை புரட்டிப் போட்ட புரட்சி  எனலாம். முதலாளித்துவ காலகட்டத்தில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காம் தொழில் புரட்சிகளின் வீச்சும் விரிவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

[07/06, 01:57] Muneera: 

முதலாவது கைத்தொழில் புரட்சி  : 

               ‌‌ உலகில் முதலாவது தொழில் புரட்சி என்பது பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்டது. குறிப்பாக 1760களில் பிரிட்டனில் இந்த தொழில் புரட்சி ஆரம்பித்தது. ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் விளைவாக அறிவியல் துறையில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய கண்டுபிடிப்புகள் முதலாம் தொழில் புரட்சிக்கு ஆதாரமாக அமைந்தது.    

                               

 இரண்டாவது கைத்தொழில் புரட்சி :

    19ஆம் நூற்றாண்டில் இரண்டாவது தொழில் புரட்சி மின்சக்தியால் ஒளியூட்ட பட்டது. அதாவது நீராவி ஆற்றலுக்குப் பதில் அனைத்தையும் மின்சக்தியை பயன்படுத்தி செய்வதுதான் இரண்டாவது தொழில் புரட்சியின் முதன்மை அம்சமாக விளங்கியது. இதன் மூலம் தொழில்துறையின் உற்பத்தி ஆற்றல் வகுவாக வளர்ந்தது .  

மூன்றாவது கைத்தொழில் புரட்சி  :                       மூன்றாம் தொழில் புரட்சியானது இருபதாம் நூற்றாண்டிலே தோன்றியது . குறிப்பாக 1970களில் தொடங்கி பின்னர் 1980 களில் பரவலான மின்னணுவியல் தொழில்நுட்பம் மூன்றாம் தொழில் புரட்சிக்கு அடித்தளம் இதட்டது.உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரம் என்ன செய்ய வேண்டும் என்பதை கணினி மொழியில் கட்டளையிட்டால் அதை உடனடியாக செய்து முடித்து விடும். இங்கு தொழில்துறை அதிவேகமாக கணினி மயமாக்கப்பட்டது .      

நான்காம் கைத்தொழில் புரட்சி:  

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த தொழில்நுட்ப யுகம் தான் நான்காம் தொழிற்புரட்சியின் காலம் என்று அழைக்கப்படுகின்றது.டிஜிட்டல் தொழில்நுட்பம் தான் நான்காம் தொழில் புரட்சிக்கு அடிப்படையாய்  அமைந்துள்ளது. செயற்கை அறிவுத்திறன்( Artificial intelligence) இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தளங்கள் (internet of things(lot )platforms ) ஸ்மார்ட்  சென்சார்ஸ் பெருந்தரவு (big data) ஆகியவை நான்காம் புரட்சி அடிப்படையாகும்.



Comments