மறக்காது நெஞ்சம்

          மறக்காது நெஞ்சம்


அன்பு வாப்பா...
கடைசியாக உங்களைக்
கண்ட அந்த தருணம்
இன்னும் மறக்குதில்லை
எமக்கு!

இராப் போசனம்
இரைப்பைக்குள்
செல்ல முன்னே
நெஞ்சு வலியால்
துடித்தீர்களே...

அதுதான் உங்களை
நாங்கள்
கடைசியாகக் கண்ட
''கண்காட்சி''

உங்களுடன்
வைத்தியசாலையை
நோக்கிச் சென்றவர்களில்
உம்மா மாத்திரம்
வந்து கதவு தட்ட
வாசல் படி சென்றோம்

நெஞ்சம் பதறியது...
நெருஞ்சி முள்ளாய்
நெஞ்சை உருத்தும்
அந்தச் சோகச் செய்தி
கேட்டு தூக்கம் துறந்து
வீரிட்டழுதோம்...।

இராப் பொழுதில்
இறப்பை நீங்கள்
எய்துவீர்கள் என
எதிர்பார்க்கவேயில்லை!

இறக்கை இழந்த
பறவைகள் போல
உங்களை இழந்து
நாம் பட்ட வேதனை
எம்மை விட்டு
என்றுமே விலகாது...

வழிந்தோடும் கண்ணீரை துடைக்கின்றோம் வாப்பா...
நீங்கள்
சுவவனத்தில் இருப்பீர்கள்
என்ற நம்பிக்கையில்...

கவிதை ஆக்கம்:
M.H.Muneera Begam
Galle

Comments

Post a Comment