பொன்மொழிகள்

அப்துல் கலாமின் பொன்மொழிகள்


  • முன்னோக்கிச் செல்லும்போது கனிவாய் இரு. ஒருவேளை பின்னோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

  • எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

  • கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதி காலம் வரை மற்றவர்களுக்காக செலவிடுங்கள்.

  • நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்...

  • நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.

  • சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் ஆபத்தைப் பார்க்கின்றான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கின்றான்.

  • மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.

  • அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.


Comments