கிழவிக் குமரி

கிழவிக் குமரி

சீதனம் ‌ கொடுக்க மாட்டோம்
மஹர் கொடுத்தே மணம் 
முடிப்போம்
என்ற கொள்கையுடன் இருங்கள்
சகோதரிகளே,
என்று கொள்கைவாதிகள் 
முழங்கியதை
ஏற்றுக்கொண்டேன் இருபது 
வயதில்!
எனக்கோ இன்று நாற்பது வயது!

உடல் தளர்ந்தாலும் கூட ...
உள்ளம் தளராது ...
இன்று வரையும்
உன்னத கொள்கையுடன் 
வாழ்கின்றேன்
ஆனால்,
சமூகமோ எனக்கு
இன்று இலவசமாக தரும் பட்டம் 
 'கிழவிக் குமாரி'

கொள்கைவாதிகளே!
என் போன்ற கிழவிக் குமரிகளை 
மஹர் கொடுத்து கரம் பற்ற 
உங்கள் மனம் இன்னும் 
இசையவில்லையா?


கவிதை‌ ஆக்கம்: 
 M.H.MuneeraBegam
Galle

Comments